• Sep 14 2025

தளபதி vs இளையதளபதி... வெங்கட் வெளிட்ட மாஸ் புகைப்படம்... அடடே திரிஷாவும் இருக்குறாங்க!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இளைய  தளபதி விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட்  திரைப்படம் தற்போது 300 கோடியை கடந்து  சாதனை படைத்து வருகின்றது. இந்த திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இதன் டார்கெட் ஆயிரம் கோடியாக காணப்படுகின்றது.


பிரியாணி, மாநாடு, மங்காத்தா போன்ற பிரபல படங்களை இயக்கியவர் தான் வெங்கட் பிரபு. இவர் விஜய்யை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதுமே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்பட்டார்கள். அதன்படியே கடந்த 5ம் திகதி கோட் திரைப்படம் விமர்சையாக திரையரங்குகளில் வெளியானது. சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீசான இந்த படம், இம்முறை லண்டன் திரையரங்கிழும் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில்சமீபத்தில் வெங்கட் பிரபு புது கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். அதாவது, புதிதாக Range Rover என்ற காரை வாங்கியுள்ளதோடு அதன் விலை 86 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியா பக்கம் வெங்கட் பிரபு தளபதி VS இளையதளபதி என் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் நடிகை திரிஷாவும் இருக்கிறார். 


Advertisement

Advertisement