• Sep 21 2024

ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி லாபம் பெற்ற தளபதி விஜய்யின் வாரிசு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் விஜய்.இவர் வம்சி இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா.

அத்தோடு சரத்குமார், குஷ்பூ,, பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே சுமார் ரூ. 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடிக்கு ரூ. 100 கோடிக்கு வெற்றிபோய்வுள்ளதாம்.

அத்தோடு, சாட்டலைட் உரிமை ரூ. 65 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை ரூ. 40 கோடிக்கும் விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் ரிலீசுக்கு முன்பே மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஜய்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement