• Oct 13 2024

கோழி அமுக்குகிற மாதிரி தான் தனுஷை மடக்கினாங்க..! ஐஸ்வர்யா பற்றி கிளம்பிய புதிய சர்ச்சை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனர் ஆகவும் பாடகர் ஆகவும் திகழ்பவர் தான் தனுஷ். இவர் தானே இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்கிறார். மேலும் இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். 

இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா பற்றி புதிய பூகம்பம் ஒன்றை கிளப்பியுள்ளார் பாடகி சுசித்ரா. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது தனுஷ் எனக்கு நெருங்கிய நண்பர். கார்த்திக்கை திருமணம் செய்ய முன்பு தனுஷை எனக்கு தெரியும். அவரை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும். சிறந்த நடிகர் அவர். ராயன் படத்தில் எல்லாம் எவ்வளவு பவராக இருந்தார் தெரியுமா? நான் நிறைய முறை அவரை உரிமை எடுத்து திட்டி உள்ளேன்.

காதல் கொண்டேன் சமயத்தில் ஐஸ்வர்யா தனுஷுக்கு பொக்கே அனுப்பினார். தனுஷ் என்னிடம் வந்து ரஜினி மகள் போகே அனுப்பியிருக்கார். அவரை எனக்குப் பிடித்திருக்கிறது திருமணம் செய்ய நினைப்பதாக.

நானும் லூசா நீ இதெல்லாம் அமிர்தாபச்சன் காலம் முதலே செய்து வருகிறார்கள். வளர்ந்து வரும் நடிகர்களை கோழி அமுக்குகிற மாதிரி தான் இதுவும். திருமணம் எல்லாம் செய்யாதே என்று சொன்னேன் ஆனால் அவனோ அவருடைய மகள் தானே அனுப்பி இருக்கிறாள் என்று சொன்னார். நான் இல்லை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அப்போதே சொன்னேன் என தெரிவித்து உள்ளார்.

Advertisement