• Jan 18 2025

தக் லைப் movie சீகரெட்டை உடைத்த அபிராமி... குஷியில் ஆண்டவரின் ரசிகர்கள்... பீதியில் மணிரத்தினம் டீம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து தக் லைஃப் என்ற படத்தில் மீண்டும் நடித்து கொண்டிருக்கிறார் கமல். இந்த படத்தில், சிம்பு,திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படம் கமல் ஹாசனுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.


இந்த நிலையில், நடிகை அபிராமி பேட்டி ஒன்றில் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், கமல் ஹாசன் ஒரு பெரிய லெஜெண்ட், அதுபோலவே மணிரத்னமும் ஒரு பெரிய லெஜெண்ட் தான். மணி சார் இயக்கத்தில் கமல் எப்படி தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார் என்பது பார்க்கவே நன்றாக இருக்கும்.


தக் லைப் திரைப்படத்தில் ஒரு காட்சி எடுக்கிறார்கள் என்றால் அதில் பல மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். ஒரு சீனில் நான் அடுப்பை பற்ற வைப்பது போன்று எடுக்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் வாவ் என்று மட்டும் தான் சொல்வேன் என அபிராமி வியந்து கூறி இருக்கிறார். 


இதற்போது இவர் கொடுத்த அப்டேட் கமல் ரசிகர்களுக்கு குஷியாக இருந்தாலும் திரைப்பட குழுவிற்கு அல்லு விட்டுள்ளது. படத்தின் ரகசியங்கள் வெளியே தெரியும் போது படத்திற்கான ஹப் குறைந்து விடுகிறது இதனாலே ஷூட்டிங் சீன்கள் ரகசியமாக்கப்படுகிறது. எனின்னும் ஆண்டவரின் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு நல்ல அப்டேட் தான்.    

Advertisement

Advertisement