• Jan 19 2025

விவாகரத்து ஆன நேரத்தில் ஜெயம் ரவிக்கு அடித்த ஜாக்பாட்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் சமீப காலமாகவே தொடர்ந்து  தடுமாறி வருகின்றார். இதன் காரணத்தினால் ஜெயம் ரவி நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம் சமூக வலைதள பக்கங்களில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனாலும் அது வதந்தி என்று கூறப்பட்டது. தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் ஜெயம் ரவி  தனது எக்ஸ் தல பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஜெயம் ரவி நேற்றைய தினம் தனது மனைவியை பிரிவதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது.


தற்போது ஜெயம்ரவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து பிரதர் படத்தில் நடித்து  வருகின்றார். இந்த படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது.


இந்த நிலையில், பிரதர் படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஜெயம் ரவி கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுப்புராஜ் இயக்கிய படங்கள் அனைத்துமே ஒரு தரமான படங்களாக காணப்படுகின்றது.

ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அதன் பின்பு சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். அந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்படுகின்றது .


Advertisement

Advertisement