• Oct 13 2024

தனது ஆட்டத்தை ஆரம்பித்த ஜேசன் சஞ்சய்.. ராயன் பட நடிகரை தட்டி தூக்கிட்டாரே..!!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய். இவர் தனது தாத்தா மற்றும் தந்தையைப் போலவே சினிமாவில் என்ட்ரி  கொடுத்துவிட்டார். இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அதற்கான வேலைகளும் ஆரம்பமாகி விட்டன.

இவ்வாறு ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திற்கு கதாநாயகனாக விஜய் சேதுபதி, ஜீவா, துருவ் விக்ரம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது. அதன் பின்பு அதர்வா, ஹாரிஸ் கல்யாண் மற்றும் கவின் ஆகியவர்களின் பெயரும் அடிபட்டது.


அது மட்டும் இன்றி தற்போது நாயகனாக கலக்கி வரும் சூரியையும் ஜேசன் சஞ்சய் சந்தித்து பேசி உள்ளார்.  ஆனாலும் அதற்கு  சூரி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் படத்திற்கு ராயன் படத்தில் நடித்த சந்திப் கிஷன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி  வைரலாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement