• Jan 19 2025

பொண்ணுங்க கொடுத்த தொல்லையால துல்கர் சல்மான் பாத்ரூமில் ஒளிய.. ஜீவா ஓடியே போய்ட்டான்! சுசித்ரா பகிர்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் உள்ள நடிகைகள் காலம் காலமாகவே உடல் ரீதியான தொல்லைகளை சந்திப்பது அதிகரித்துவிட்டது . எல்லாத்துறையிலும் இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. தற்போது  மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு  வந்துள்ளன.

இதை தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் தங்களுடைய புகார்களை தைரியமாகவே வழங்கி வருகின்றார்கள். தமிழ் சினிமா துறையிலும் இதனால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என தனியாகவே குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நடிகர், நடிகைகளை பற்றி பல அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வரும் சுசித்ரா மேலும் சில விடயங்களை தெரிவித்துள்ளார். 


அதாவது மலையாள  சினிமாவில் பாலியல் தொல்லைகள் மிகவும் அதிகம். அந்த நேரத்தில் நடிகர்களுக்கு பெண்கள் கொடுக்கும் தொல்லையும் அதிகம். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. சென்னையில் நடந்த பார்ட்டி ஒன்றில் துல்கர் சல்மானை பல பெண்கள் சூழ்ந்தார்கள். அவர் ஓடிப்போய் பாத்ரூமில் ஒழிந்தார்.

அதேபோல தனுஷும் சிம்புவும் அழைத்ததால் ஒரு பார்ட்டிக்கு வந்த நிவின் பாலி பெண்கள் கொடுத்த தொல்லையில் அங்கிருந்து ஓடியே போய்விட்டான். நடிகர் ஜீவாவை ஒரு பார்ட்டில் பெண்கள் சீண்டினார்கள். ஒரு பிரபலமான டிவி தொகுப்பாளனி ஜீவாவை விரட்டினார். அவரும் ஓடி விட்டான். 

நடிகர்களுடன் படுக்கையை பகிர ஆசைப்படும் பல பணக்கார பெண்கள் இங்கே இருக்கின்றார்கள்..என் மகளுடன் டேட்டிங் போறீங்களா என பெரிய கோடீஸ்வரர்களே தங்களுடைய மகனுக்காக இளம் நடிகர்களிடம் பேசுவார்கள். இதையெல்லாம் நான் பார்த்துள்ளேன் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement