• Sep 20 2024

மல்டி ஸ்டார் படமாகும் ‘தளபதி 69’.. 10 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபலம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்றும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக ’தளபதி 69’ திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மற்றும் மோகன்லால் ’ஜில்லா’ என்ற படத்தில் இணைந்து நடித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மோகன்லால் மட்டும் இன்றி கன்னட திரையுலகில் ஒரு பிரபலமும், தெலுங்கு திரையுலகில் ஒரு பிரபலம் நடிக்க இருப்பதாகவும் பாலிவுட் திரை உலகில் உள்ள ஒரு பிரபலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் மாஸ் மற்றும் மல்டி ஸ்டார் படமாக பிரமாண்டமாக ’தளபதி 69’ உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement