• Jan 18 2025

பாண்டியனுக்கு எதிராக ராஜியை ஏற்றிவிடும் தங்கமயில்.. கதிர் காணும் கனவு.. மீனா, ராஜி மகிழ்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சொன்னதை புரிந்து கொண்டு ராஜி கல்யாணம் குறித்து கணவரிடம் பேசமாட்டேன் என்று கோமதி வாக்குறுதி கொடுக்கிறார்.  ஆனால் அதே நேரத்தில் அவரிடம் இனிமேல் பேச மாட்டேன் என்றும் கோபமாக கூறுகிறார்.

இதனை அடுத்து அனைவரும் சாப்பிட உட்காரும்போது தட்டு, டம்ளரை டம் டும் என்று கோமதி வைக்கும் நிலையில் கோமதி கோபமாக இருக்கிறார் என்பதை அப்போது கூட பாண்டியன் புரிந்து கொள்ளாமல், தட்டு நெளிந்திடும், மெதுவாக வை  என்று கூறியது கோமதிக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

இதனை அடுத்து கோமதி, மீனா, ராஜி ஆகிய மூவரும் சாப்பிடும் போது அங்கு வரும் தங்கமயில் அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜியை நன்றாக ஏற்றி விடுகிறார். ’எல்லோரும் முன்னிலையிலும் உன் புருஷனை மாமா அடிச்சிட்டாரே உனக்கு கோபம் இல்லையா? அப்படி அடிக்க கூடாது அல்லவா, அதுவும் எல்லோர் முன்னிலை அடிக்க கூடாது அல்லவா’ என்று ஏற்றி விடுகிறார்.

ஆனால் ராஜி புத்திசாலித்தனமாக ’என் வீட்டில் கூட என் அண்ணனை என் அப்பாவும் சித்தப்பாவும் அடிப்பார்கள், குடும்பம் என்று இருந்தால் சண்டை வரத்தான் செய்யும், அதற்கு என்ன செய்ய முடியும், எனக்கு கோபம் எல்லாம் இல்லை, வருத்தம் மட்டுமே என்று கூறுகிறார்.



இருந்தாலும் அடிக்கக் கூடாது என்று தங்கமயில் கூறிய போது ’ஏன் உங்கள் வீட்டில் எல்லாம் உங்கள் அப்பா உங்களை அடித்ததே இல்லையா’ என்று மீனா கேட்க, ‘அடிக்கும் அளவுக்கு நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன்’ என்று வழக்கம்போல் பில்டப் செய்கிறார்.

இதனை அடுத்து சரவணன், செந்தில், கதிர் மற்றும் பழனி மாமா ஆகிய நால்வரும் ஜாலியாக மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் ’அப்பா என் மேல் இப்போது கோபமாக இருக்கிறார், ஆனால் அப்பா பெருமைப்படும் அளவுக்கு நான் ஏதாவது செய்வேன்’ என்று கதிர் கூறுகிறார். அப்படி என்ன செய்வாய் என்று எல்லோரும் கேட்க ’நான் தொழிலதிபராக போகிறேன், கோடிக்கணக்கில் சம்பாதிக்க போகிறேன், இந்த குன்றக்குடியை விலைக்கு வாங்க போகிறேன்’ என்று சொல்ல எல்லோரும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்கு வரும் மீனா மற்றும் ராஜி அவர்கள் சொல்வதைக் கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர் ’கொழுந்தனாரே நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று மீனா வாழ்த்து கூறுகிறார். இதனை அடுத்து அங்கு வரும் தங்கமயில் ’இன்னும் தூங்க வரலையா என்று சரவணனிடம் கேட்க, ’நான் பிறகு வருகிறேன் நீ போ’ என்று சரவணன் கூறுகிறார்.

மேலும் நால்வரும் மொட்டை மாடியில் தான் அன்றைய தினம் தூங்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மாமாவை இன்னும் காணமே என்று தங்கமயில் புலம்புவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement