• Apr 15 2026

’ஆரம்பிக்கலாமா’.. ரஜினியின் ‘தலைவர் 171’ புரமோ வீடியோ ரிலீஸ் தேதி இதுதான்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் திரைக்கதையை முழுமையாக லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாகவும் அடுத்த கட்டமாக அவர் நட்சத்திர தேர்வில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கடந்த சில வருடங்களாக தான் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடுவார் என்பதும் அவ்வாறு கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ விஜய் நடித்த ’லியோ’ ஆகிய படங்களுக்கு ப்ரோமோ வீடியோ வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'தலைவர் 171’ படத்திற்கும் ப்ரோமோ வீடியோ உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’தலைவர் 171’ படத்தின் ப்ரோமோ வீடியோ ஈவிபி பிலிம் சிட்டியில் ஏப்ரல் 8ஆம் தேதி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த வீடியோவை ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமலுக்கு ’ஆரம்பிக்கலாமா’ என்று தொடங்கிய ப்ரோமோ வீடியோ ரஜினிக்கு எவ்வாறு ஆரம்பிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement