• May 18 2024

வாடிவாசல் திரைப்படத்தில் இணையவுள்ள தல அஜித்... அப்போ சூர்யா என்ன செய்ய போகிறார்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

வாடிவாசல் திரைப்படம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம். கிராமத்து கதை, ஏறுதழுவுதல் என சூர்யாவிற்கு வேறு ஒரு பரிணாமத்தில் காட்டப்போகும் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரியா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக போகிறது என சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் இந்த படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.


நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் நடைபெற்ற தகராறு இப்போது மிகப்பெரிய பூகம்பமாக வெடித்திருக்கிறது. அந்த வகையில், அமீர் நடிக்கிறார் என்பதால் சூர்யா வாடிவாசல் படத்திலிருந்து விளக்குகிறார் என்பது போன்ற வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்தோ நடிகர் சூர்யா தரப்பிலிருந்தோ எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.


இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தல அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு படம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. அடுத்தபடியாக இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்ப்பதாக தகவல் வெளியான நிலைகள் அந்த படம் வாடிவாசல் தான் என சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இயக்குனர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினைகளினால் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் அஜித் நடிப்பார் என்ற வதந்திகளும் பரவியது. இந்த வதந்திகளை மிகவும் வேகமாக இணையத்தில் வைரல் ஆகியது.


வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்கிறாரா என்ற கேள்வி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வாதமாக எழுந்து வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வெற்றிமாறன் மற்றும் சூரியா கூட்டணி வாடிவாசல் படத்தில் இணையப் போவது உறுதி. வாடிவாசல் படத்தில் எந்த ஒரு நடிகர் மாற்றமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. வாடிவாசல் படத்திற்கான கதை முழுக்க முழுக்க சூரியவிற்காகவே எழுதப்பட்டது. மேலும் வாடிவாசல் படத்தில் ஏறுதழுவுதலுக்காக பல பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டு இருக்கிறார். அதனால் கண்டிப்பாக அவர் மாறப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement