• Jan 18 2025

தோசை சுட்டு சாரி கேட்ட ’சிப்பிக்குள் முத்து’ சீரியல் நடிகர்.. என்னவாக இருக்கும்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரி என்ற தோசையை சுட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். அதனை அடுத்து அவர் ’என்றென்றும் புன்னகை’ ’சிப்பிக்குள் முத்து’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார் என்பதும் ’சிப்பிக்குள் முத்து’ சீரியல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கில் தற்போது விஷ்ணுகாந்த் ’குடிகண்டலு’  என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடர் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுகாந்த், தேஜஸ்வினி உள்ளிட்டோர் நடித்து வரும்  இந்த தொடரில் ரொமான்ஸ் காட்சிகள் குறிப்பாக இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரி என்ற ஆங்கில எழுத்துக்களில் தோசை சுட்ட வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த வீடியோ சீரியல் வரும் காட்சியாக இருக்கலாம் என்றும் அடிக்கடி கோபப்படும் தேஜஸ்வினியை சமாதானப்படுத்த இந்த சாரி தோசையை அவருக்கு சுட்டுக் கொடுக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் விஷ்ணுகாந்த், சம்யுக்தா என்ற சின்னத்திரை நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மிக குறுகிய காலத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement