• Sep 16 2024

சூரியின் அடுத்த ரூ.50 கோடி வசூல் படம்.. கருடனை அடுத்து இன்னொரு படத்தின் முக்கிய அப்டேட்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூரி நடித்த ’கருடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து சமீபத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த ’கருடன்’ திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்தியாவிலேயே நகைச்சுவை நடிகர் ஒருவர் ஹீரோவாக நடித்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரி ஏற்கனவே சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த ’கொட்டுக்காளி’ என்ற படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படம் அனேகமாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ’பிப்பிள்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை  சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.  சூரி, அன்னாபென் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ’கருடன்’ படத்தை அடுத்து ’கொட்டுக்காளி’ படமும் 50 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement