• Jan 18 2025

தளபதியை தோற்கடித்து தலைவர் பதவியை பிடித்த சின்னத்திரை சீரியல் இயக்குனர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் நேற்று காலை நடந்த நிலையில் நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் தளபதியை எதிர்த்து போட்டியிட்ட மங்கை அரிராஜன் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை இயக்குனர் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த இரண்டு முறை தளபதி என்பவர் தான் இந்த சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இந்த சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்ற நிலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

உழைப்பாளர் அணி என்ற பெயரில் தளபதி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட, அவரை எதிர்த்து மங்கை அரிராஜன் போட்டியிட்டார். மேலும் நிர்வாகிகள் பதவிக்கு குட்டி பத்மினி, அரவிந்தராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மங்கை அரிராஜன் வெற்றி பெற்றதாகவும் தளபதி தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தளபதி அணியினர் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியை கைப்பற்றியுள்ளனர் என கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன மம்மி சின்ன டாடி’ உள்பட பல சீரியல்களை மங்கை அரிராஜன் இயக்கி உள்ளார். இவர் சங்கத்தின் புதிய தலைவர் ஆகியுள்ள நிலையில் இவரது தலைமையில் சங்கம் புதுப்பொலிவுடன் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement