• Mar 25 2023

நகையோடு வந்த வருண்- சுருதியை வீட்டை விட்டுத் துரத்தும் தருண்- 'மௌன ராகம் 2' சீரியல் ப்ரோமோ

Prema / 1 month ago

Advertisement

Listen News!

மௌன ராகம் சீரியலில் இந்த வார ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்தவகையில் மௌன ராகம் சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் சுருதி நகைப் பெட்டியை கொண்டு வந்து ஒருவரிடம் கொடுத்து "கிரான்ட் மா கிட்ட பேசிட்டு சொல்லுறேன், அவங்க சொல்லுற இடத்தில் நகையை கொண்டு போய் பத்திரமாக சேர்த்திடு" எனக் கூறி விட்டு செல்கின்றார்.  அனைத்தையும் வருண் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

சுருதி சென்றதும் அந்த ரவுடிக்கு அருகில் சென்று அவனை அடித்து விட்டு "அவ என்னடா சொன்னவா சொல்லுடா" என மிரட்டுகின்றார். அதற்கு அவன் "டோரில் இருந்து நகையை எடுக்க சொன்னாங்க" எனக் கூறுகின்றார்.


அதற்கு வருண் "அப்போ அந்த நகை எங்கே எனக் கேட்கின்றார். அதன் பின்னர் சக்தியும் வருணும் அந்த நகைப் பெட்டியை எடுத்து வந்து வீட்டில் கொடுக்கின்றார்கள். அதற்கு வருண் சுருதி தான நகையை எடுத்து ஒளித்து வைத்தாக கூறுகின்றார்.


இதனைத் தொடர்ந்து தருண் "இனிமேல் நீ இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது" எனக் கூறி சுருதியை வெளியே போக சொல்கின்றார். அதற்கு சுருதி ஷாக்கடைந்து அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்து இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement