• Jan 19 2025

வேறு நடிகையுடன் லிவிங் டுகெதரில் வாழும் தமன்னாவின் காதலன்! போட்டுடைத்த பிரபலம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை தமன்னா. 

ஜெயிலர் படத்திற்கு முன்பு இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு  ஓவர் கவர்ச்சி காட்டி முத்த காட்சி, படுக்கையறை காட்சி என அனைத்து விதத்திலும் நடித்திருந்தார். இதற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனாலும் அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலியா பாட்டுக்கு நடனமாடி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் பிறகு அரண்மனை 4 படமும் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் ஒரு பாடலில் மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆக இருந்தார்கள்.

மறுபக்கம் நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியான நிலையில், கடந்த ஆண்டு அது உண்மைதான் என பொதுவிலே அறிவித்திருந்தார்கள். இந்த ஜோடி தற்போது ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஜோடியாகவும் திகழ்கின்றது.


இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் விஜய் வர்மா பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,

பாலிவுட்டில் பிரபல நடிகரான விஜய் வர்மா இன்னும் ஒரு நடிகையுடன் டேட்டிங் சென்று உள்ளார். அவருடன் லிவிங் டுகெதர்  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை பிரபல நடிகர் சைஃப் அலிகாலின் மகள் சாரா அலிகான்.

விஜய் வர்மா , சாரா அலிகான் இருவருமே மார்டன் முபாரக் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதில் அவர்களுடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதன் பிறகு அவர்கள் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. இது தமன்னாவுக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement