• May 13 2024

தமன்னா என்ன தங்கமா? தள்ளிக்கொண்டு ஓடிய ரம்பாவின் கணவர்! மின்னல் வேகத்தில் அணைத்துச் செல்லும் காட்சி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் நடைபெறவுள்ள Northern Uni இன் பிரமாண்ட இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து உள்ளார்கள்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிஹரன் இசை நிகழ்வு இன்றைய தினம் நடைபெற உள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென் இந்திய பிரபலங்களான நடிகர் சிவா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, நடிகை ரம்பா, கலா மாஸ்டர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளனர். 

இந்த நிலையில், இன்றைய தினம் Northern Uni இன் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு நடிகை தமன்னா,காமெடி நடிகர் யோகி பாபு, புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை  சென்றடைந்துள்ளார்கள்.

இவ்வாறு, அவர்கள் யாழ்ப்பாண விமான நிலையத்தை சென்றடைந்த காட்சியும், அவர்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் யாழ்ப்பாணத்தை சென்றடைந்த யோகி பாபு அங்கிருந்த ஊடகவியலாளருக்கு சிறிது நேரம் பேட்டி வழங்கி சென்றுள்ளார்.

தமன்னாவின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு காணப்பட்டது. அத்துடன் அவர் விமானநிலையத்திலிருந்து வெளியே வரும் போது புகைப்படம் வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்கும் முகமாக ஓடிச்சென்று காருக்குள் ஏறினார். அவருடன் சேர்ந்து ரம்பாவின் கணவர் இந்திரனும் ஓடியதை காணக்கூடியதாக இருந்தது

நடிகை தமன்னா வந்த வேகத்திலேயே காருக்குள் ஏறி சென்றுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement