தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் இதுவரை 65 படங்களுக்கு மேல் நடித்திருப்பதோடு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தமிழில் கேடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் தமன்னா. இதில் கல்லூரி படம் இவருக்கு மிகப்பெரிய ஒப்பனிங்காக அமைந்தது. இந்த படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்
பின்னர் அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார் . அதிலும் இவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இவரது கவர்ச்சி மற்றும் வீரம் இரண்டுமே ரசிகர்களை வெகுவாகவே வியப்பில் ஆழ்த்தி இருந்தது. டாப் 10 நடிகையாகி விட்ட இவர் தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஹாரர் மூவியான பெட்ரமாக்ஸ் மற்றும் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதன் பிறகு தமன்னாவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவுமே இல்லை இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என சென்றுவிட்டார். பாலிவுட் பக்கம் சென்றதால் முன்பை விட அதிக கவர்ச்சி காட்டி தூள் கிளப்பி வருகிறார் தமன்னா.
அந்த வகையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையுடன் தோன்றும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.
Listen News!