• Dec 10 2022

கோமாளி பட இயக்குநரின் நடிப்பில் உருவாகும் லவ் டுடே படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் குறும்ப இயக்குநராக இருந்து ரசிகர்களால் கவரப்பட்ட வெள்ளித்திரை இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

இப்படம் ஜெயம் ரவியின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் காணப்படுகின்றது.கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகின்றார்.


இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.