• Mar 10 2026

மாஸ்க்கைக் கழட்டடா?, ரசிகர்களின ஆசையை நிறைவேற்றிய சூர்யா- வைரலாகும் வீடியோ, கொடுத்து வைத்த பையன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் சூர்யா. கங்குவா படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.


இதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் என்கின்றனர். அது ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் படமா அல்லது இரும்பு கை மாயாவி திரைப்படமா என தெரியவில்லை விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா ஏர்போட்டில் செல்லும் போது ரசிகர்கள் அவரை செல்பி எடுப்பதற்காக அழைக்க சூர்யா அவர்களுடைய போனை வாங்கி  செல்பி எடுத்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement