• Jan 19 2025

கே.ஜி.எப் திரைப்பட நடிகர் யாஷின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் யாஷ்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யாஷ், ஆரம்பத்தில் சீரியல் நடிகராக தான் தனது கேரியரை ஆரம்பித்தார்.

தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான  ஜம்படா ஹுடுகி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கேஜிஎஃப் திரைப்படம் தான்.இப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.


இப்போது கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார். கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இந்த நிலையில் இன்று 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு படத்துக்கு 6 கோடி வரை சம்பளம் வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.அதனால் மாதம் 60 லட்சம் வரை சம்பாதிக்கும் யாஷ், ஆண்டுக்கு 8 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். பெங்களூருவில் வசிக்கும் யாஷின் அப்பார்ட்மெண்ட் விலை 6 கோடி என சொல்லப்படுகிறது.


 அதேபோல் விதவிதமான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் யாஷ். சுமார் 90 லட்சம் மதிப்புடைய Mercedes Benz GLS 7 சீட்டர், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mercedes GLC 250D Coupe, a 5-seater, 80 லட்சம் மதிப்பிலான Audi Q7, 70 லட்சம் மதிப்புடைய BMW 520D, 40 லட்சம் மதிப்பிலான Pajero Sports ஆகிய கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார். அதன்படி யாஷின் சொத்து மதிப்பு மொத்தம் 60 கோடி ரூபாய் என தகவல்கள்  வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement