• Mar 20 2026

சூர்யாவின் 'ரெட்ரோ பொங்கல் வாழ்த்து! வெளியானது தரமான போஸ்டர்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது சூர்யா 44, சூர்யா 45 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 உருவாகி வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் ரெட்ரோ பொங்கல் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


சூர்யாவிற்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

இந்நிலையில் இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரெட்ரோ படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 


Advertisement

Advertisement