• Oct 13 2026

வெற்றியின் ரகசியத்தை உடைத்த சூர்யா..! இளைஞர்களுக்கு சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்

shali / 1 day ago

Advertisement

Listen News!

வாழ்க்கையில் எதையும் சாதிப்பதற்கு முதல் படி மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தி, நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நடிகர் சூர்யா தனது திரைப்பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர், எல்லாவற்றிற்கும் ஒரு முதல் படி இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். தான் சினிமாவுக்குள் வந்தபோது நடிப்பதற்குக்கூடத் தெரியாது என்றும், சினிமா தொடர்பாக எதுவுமே தெரியாத நிலையிலேயே தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்து முயற்சி செய்வதும், திரும்பத் திரும்பப் பயிற்சிகளை மேற்கொள்வதும் தனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு தொடர்ச்சியான பயிற்சிகளும் முயற்சிகளும் காரணமாகவே 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் சினிமாவில் தன்னால் நிலைத்து நிற்க முடிந்துள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னால் இந்த நிலையை அடைய முடிந்தால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த துறைகளில் சாதிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது அனுபவத்தின் ஊடாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வகையில் சூர்யா பகிர்ந்துள்ள இந்தக் கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

திறமை மட்டுமன்றி, விடாமுயற்சியும் தொடர்ச்சியான பயிற்சியும் ஒருவரின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதை அவரது பேச்சு எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement