• Mar 23 2023

95-வது ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்து முடித்த சூர்யா.! அவரே வெளியிட்ட வைரல் பதிவு இதோ!!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் 95 வது ஆஸ்கார் விருதுகளின் நடுவர் குழுவில் சேர அழைக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா இந்த பெருமையை பெற்றார். 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ மற்றும் டி.ஜே ஞானவேலு இயக்கிய ‘ஜெய் பீம்’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு அவருக்கு இந்த மரியாதை கிடைத்தது என்றே சொல்லலாம். 

95-வது ஆஸ்கார் விருதுக்கு வாக்களிக்கும் பணியை முடித்துவிட்டதாக சூர்யா இன்று மதியம் உறுதிசெய்து, அதன் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement