• Mar 25 2023

மும்பையில் பிரபல உணவகத்திற்கு குடும்பத்துடன் வந்த சூர்யா- ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை - ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தான் சூர்யா கதாநாயகனாக மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இக் கதாப்பாத்திரம் இவருக்க நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


 சூர்யா அண்மையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினார். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு  தனது குடும்பத்தினருடன் வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அப்போது வீடியோ எடுத்தவர்களிடம், தான் குழந்தைகளுடன் வந்திருப்பதாகவும், தயவு செய்து வீடியோ எடுக்காதீர்கள் என அன்பாக வந்து வேண்டுகோள் விடுத்து சென்றுள்ளார். சூர்யா தனது குழந்தைகளை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவருவதை ஒருபோதும் விரும்பியதில்லை. இதற்கு முன் ஏர்போர்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement