தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பல வெவ்வேறு சாதனைகளையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மாத்திறமே சர்வதேச அளவில் பாராட்டப்படும் திரைப்படங்களாக காணப்படுகின்றது. அவ்வாறான திரைப்படமே ஏழு கடல் ஏழு மலை ஆகும்.
ஏழு கடல் ஏழு மலை என்பது வெளியாக்குவதற்கு தயாராக இருக்கும் இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இதில் நிவின் பாலி , சூரி , அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளதுடன் குறித்த படத்தை ராம் இயக்கியிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த படம் சாதனை செய்துள்ளது.
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் இன்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 'நோ லிமிட்' எனும் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது.
குறித்த படத்தின் தயாரிப்பாளர் இது குறித்து அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது. ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியிருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்
ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது.
ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ்… pic.twitter.com/bwjtcUD9Ll
Listen News!