• Jan 19 2025

பிரச்சினையை தூண்டிவிட்டு ஒப்பாரி வைத்த சரண்யா.. ராஜி கொடுத்த பதிலடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் இன் ப்ரோமோ வெளியாக உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோமதியும் ராஜீயும் கிச்சனில் நின்று கொண்டு போட்டோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த சரண்யா என்ன பாக்கறீங்க எனக் கேட்கிறார்.

அப்போது வேறு வழியில்லாமல் ராஜி போட்டோவை காட்ட, அதில் மீனா பீச்சில் இருந்து போட்டோ அனுப்பியுள்ளார். அதை பார்த்து விட்டு செல்கிறார்.

தொடர்ந்து அங்கு வந்த பாண்டியன், மீனா, செந்திலை காணவில்லை, போனும் ஆஃப்ல இருக்கு என்று சொல்ல, சரண்யா உடனே அவங்க பீச்சில இருந்து போட்டோ அனுப்பினாங்க என சொல்லுகிறார்.

இதனால் கோவப்பட்ட பாண்டியன், இந்த  வீட்டுல நடக்கிற எல்லாம் சரண்யா தான் சொல்லுது என உண்மையை உடைக்க, கோமதி மறந்துட்டேன் என சமாளிக்கிறார்.

அவர் போன பின்பு ராஜி சரண்யாவிடம், நீங்க நல்லது பண்றதா நினைச்சு பண்ற எல்லாமே தேவ இல்லாத விஷயம் தான். இனி அவசரப்பட்டு பேசி காரியத்தை கெடுத்து விட்டுராதைங்க என சொல்ல, சரண்யா அழுகிறார். இதன் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement