தமிழ் சினிமாவின் மகா சக்தியாக திகழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது 'கூலி' என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக கலக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவர்களின் கூட்டணி ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கிறது.
இப்படம் தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என்பதுடன் இது ரஜினியின் 170வது படமாகவும் விளங்குகின்றது. ரஜினிகாந்த், லோகேஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் இந்த3 மாஸ் கூட்டணியில் உருவாகும் 'கூலி' திரைப்படம் தற்போது பல காரணங்களால் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முக்கியமாக, ரஜினிகாந்த் இப்படத்திற்காக பெற்ற சம்பளம் பற்றி வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், ரஜினிகாந்த் இப்படத்தில் நடிப்பதற்காக 280 கோடி சம்பளம் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது. 'கூலி' படம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நாள் இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் என்பதால், 4 நாள் ஹாலிடே உள்ளது. இதனால் மாஸ் கலெக்ஷன், வசூல் சாதனை என இரட்டைப் பலன் இப்படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!