• Apr 20 2026

கமலின் தக் லைஃப் திரைப்படத்திலிருந்து வெளியாகிய சூப்பர அப்டேட்- அடடே இவரும் இணைந்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன

இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.இந்தப் படத்தின் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இதனை அடுத்து தற்பொழுது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதாவது இப்படத்தில் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதற்கான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என்கின்றனர். 


கமல், மணிரத்னம் காம்போவில் வெளியான 'நாயகன்' படம் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையில் மாஸ்டர் பீஸாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைடுத்து தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement