• May 21 2024

பறிபோகவுள்ள போட்டியாளர்களின் மேக்அப் பொருட்கள்... பிக்பாஸ் கொடுத்த சூப்பர் டாஸ்க்... வெளியானது ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் கடந்த 7-ஆண்டுகளாகத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்தோடு சண்டை, சச்சரவுகளும் இடம்பெற தொடங்கி விட்டன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் முதல் ஷாப்பிங் ரீபிளேசிங் டாஸ்க் "வெயிட் பார்ட்டி' என்ற பெயரில் இடம்பெறுகின்றது. மேலும் இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்படுகின்றது.


ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருள் கொண்டு வந்து அதனுடன் எடை மேடையில் நிற்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. போட்டியாளர்களும் எடை மேடை மேல் நிற்கின்றனர். இவ்வாறாக இந்த ப்ரோமோ வெளிவந்துள்ளது. இந்த டாஸ்க்கில் யார் ஜெயிக்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement