• Jan 19 2025

’மல்லி அக்கா என்ன கில்லியா? சன் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோ வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டிலுமே சில சீரியல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதிய சீரியல் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சரிகம நிறுவனம் சன் டிவியில் இரண்டு சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் அதில் ஒன்று ’மல்லி’ என்றும் இன்னொன்று ’டெல்னா டேவிஸ் நடிக்கும் சீரியல் என்றும் தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் தற்போது சரிகம நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சீரியலை அறிவித்துள்ளது என்பதும் அந்த சீரியலின் டைட்டில் ’மல்லி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ’ஒழுங்கா ஏன் ரிப்பனை தந்துவிடு, இல்லாவிட்டால் மல்லி அக்காவிடம் சொல்லிவிடுவேன் என்று ஒரு சிறுமி கூற, அவருக்கு ஒரு சிறுவன் மல்லி அக்கா என்ன கில்லியா? என கூற அப்போது மல்லி சைக்கிள் வரும் காட்சிகள் உள்ளதை அடுத்து அந்த சிறுவன் பயந்து ஓடுகிறார்.

அப்போது ’ஓரம்போ ஓரம்போ மல்லி அக்கா வண்டி வருது’ என்ற பாடல் பின்னணியில் மல்லி வரும் காட்சியும் அவர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லும் காட்சியும் உள்ளது. அப்போது மாணவர்களில் ஒருவர் ’எங்கள் மல்லி அக்கா பாடமும் சொல்லித் தருவாங்க, பாசத்தையும் அள்ளித் தருவாங்க’ என்று சொல்வதுடன் இந்த ப்ரோமோ முடிவுக்கு வந்துள்ளது.
 
மொத்தத்தில் மல்லி சீரியல் ப்ரோமோ வீடியோ அசத்தலாக இருப்பதை எடுத்து இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement