• Jan 19 2025

சிறகடிக்க ஆசையில் பரிதாப நிலையில் விஜயா.. மனோஜை பார்த்ததும் தள்ளி ஓடிய ரோகிணி! ஸ்ருதி எடுத்த முடிவு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கோவிலுக்கு சென்ற மீனா, அங்கு மனோஜ் பிச்சையெடுப்பதை பார்த்துவிட்டு என்னாச்சு? ஏன் இங்க இருக்கீங்க என கேட்க, மனோஜ் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். இதனால் முத்துவுக்கு போனை போட்டு உடனே வர சொல்லுகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு போன ஸ்ருதி, அச்சா பார்த்த மாப்பிள்ளை என்னை வழிமறிச்சு பிரச்சினை பண்ணினான். முத்து தான் என்னை காப்பாத்தினார் என சொல்ல, எல்லாம் முத்து போட்ட பிளானா தான் இருக்கும். அவன் தான் விச்சுவ வர சொல்லி இருப்பான் என சொல்ல, சம்பந்தம் இல்லாம பேசாதைங்க, இன்டைக்கு தான் அவங்க சந்திச்சு இருகாங்க. இதுக்கு முதல் அவங்க பாத்தது கூட இல்லை, எனக்கு உங்க மேல கூட தான் சந்தேகம் வருது என வாசுதேவனுக்கு சொல்லுகிறார்.

மேலும், நீங்க தான் மீனாவ பத்தி தப்பா கதைச்சி இருக்கீங்க, அவங்க என்ன சொந்த சிஸ்டர் போல தான் பாத்துக் கொள்றாங்க, மிடில் கிளாஸ் பாமிலி என்றா காசுக்கு தான் ஆசைப்படுவாங்களா? என பதிலடி கொடுக்கிறார். என் தப்பு தான் இங்க வந்து இருக்கவே கூடாது. ரவி பாவம். உங்க சண்டைல நாங்க ஏன் பிரிஞ்சு இருக்கனும் என போறேன் என சொல்லி கிளம்புகிறார்.


மறுபக்கம் மனோஜ் கத்தி கத்தி தொண்டை அடைச்சு போய் விடுகிறது. அங்கு போய் ஏன் இப்படி பண்ணுறா? வா வீட்ட போகலாம் என கூப்பிட, நான் கனடா போகணும், காசு வேணும். இது சாமியார் சொன்ன பரிகாரம் என சொல்ல, எந்த சாமியாரும் இந்த பரிகாரம் சொல்ல மாட்டாங்க என சொல்லி அவரை இழுத்து செல்கிறார்கள். உடுப்பு இல்லாமல் அதே பிச்சைகார உடுப்புடன் காரில் ஏறி செல்கிறார்.

வீட்டுக்கு போனதும் மனோஜ் வாசலிலே நிற்க, விஜயா பிச்சைக்காரன எதுக்கு வீட்டுக்கு கூட்டி வந்தா என முத்துவுக்கு திட்டுகிறார். மேலும் உனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட வேண்டியது தானே எதுக்கு பிச்சை எடுக்கிற, மீனா பழைய சோறு இருந்தா போட்டு அனுப்பு என சொல்கிறார்.

மனோஜ் அம்மா... என்று கூப்பிட சீ.. சீ.. அப்படி கூப்பிடாத என காதை பொத்துகிறார் விஜயா. ஆனால் மனோஜ் தலையில் போட்டு  இருந்த துண்டை எடுக்க அப்படியே ஷாக்காகி அமர்ந்து விடுகிறார்.

அதற்கு பிறகு ஏன்டா உனக்கு இந்த நிலைமை, நான் ராஜா மாதிரி தானே வளர்த்தேன். எதுக்கு இப்படி பண்ணினாய் என பேச, கனடால நல்ல வேலை இருக்குது. நீங்களும் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டீங்க, இதுக்கு சாமியார் பரிகாரம் சொன்னார். அதனாலதான் இப்படி பண்ணினேன் என சொல்லுகிறார்.

இதைப் பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைந்து மனோஜ்க்கு அருகில் செல்ல, முத்து பாலரம்மா அவனுக்கு கிட்ட போகாத தள்ளியே நில்லு, இன்னொரு பிச்சைக்காரன்ட இருந்து தான் அந்த உடுப்பை வாங்கி போட்டு இருக்காருன்னு சொல்ல ரோகிணியும் தள்ளி நிற்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement