மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,திரிஷா ,கமல் நடித்துள்ள "thugh life " திரைப்படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப் படத்தின் trailor வெளியாகி விமர்சனங்கள் ரீதியாக ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன் முக்கிய சினிமா பிரபலங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளமையால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படத்தின் முதலாவது சிங்கிள் "ஜிங்குச்சான் " பட்டி தொட்டி எங்கும் வைரலாகியது. படக்குழு புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவி தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரோமோ வீடியோ இதோ..
Listen News!