• May 20 2024

படிப்பு மட்டும் முக்கியமில்லையே, - ஜோவிதாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் வெடித்த மோதல்- Bigg Boss Promo 2

stella / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து வருவதால் அடிக்கடி போட்டியாளர்களுக்கிடையில் மோதல்,கலவரம் என்பனவும் வெடித்து வருகின்றது.

இந்த சீசன் நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் பிரதீப் அதிகம் மக்களால் பேசப்படுகிறார். மேலும் இன்றைய நாளுக்கான முதல் வெளியாகிய ப்ரோமோவில் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜோவிதா தன்னை படிக்கவில்லை என விசித்திரா,கூறியதைக் கூறியுள்ளார். மேலும் படிச்சு தான் பெரியவங்களாக வரணும் என்று இல்லை, படிப்பு வராதவங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகத் தான் வந்திருக்கிறேன் என்றும் கூறி சண்டை போட்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement