• May 18 2024

பிரமாண்டமாக நடைபெறவுள்ள லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி- தளபதி கலந்து கொள்ளமாட்டாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், பகத் பாசில், சாண்டி, அர்ஜூன் தாஸ்,பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு கடந்த மாதம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில், இசைவெளியீட்டு விழா, நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடந்து லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. 


அதை தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர்  நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இந்த ட்ரெய்லர் தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தினைப் பிடித்துள்ளது.மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் போலியாக அச்சடித்து விற்பக்கப்பட்டது தெரிந்ததும் உஷாரான படக்குழு, ரசிகர்களின் நலன் கருதி இந்த ஆடியோ லாஞ்சை கேன்சல் செய்தது.

ஆடியோ லாஞ்சுக்கு அடுத்தபடியாக டிரைலர் வெளியீட்டுக்கும் பெரிதாக விழா எதுவும் நடத்தப்படாததால், லியோ படம் எந்தவித ப்ரமோஷனும் இன்றி வெளியாகப்போகிறதா என்கிற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய சம்பவத்தை சர்ப்ரைஸாக செய்து வருகிறதாம் லியோ படக்குழு. அதுதான் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.


லியோ படத்திற்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம். அதுவும் இந்தியாவில் இல்லை, துபாயில் நடத்தப்பட உள்ளதாம். அந்நிகழ்ச்சியில் அனிரூத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தளபதி 68 பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய் பிசியாக இருப்பதால் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற அக்டோபர் 12-ந் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement