தமிழ் சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் நடிகர் ஆர். மாதவன் நேற்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஒரு ஸ்பெஷல் பதிவு தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில், நடிகர் மாதவன் உடன் நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒரு சொகுசு படகில் கடலின் நடுவே ஜாலியாக போஸ் கொடுத்துள்ளனர். துபாய் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

90-களில் தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக கோடி ரசிகைகளின் கனவுகளைக் கைப்பற்றிய மாதவன், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களால் பாலிவுட் வரை தனது நடிப்பை விரிவாக்கியுள்ளார். சமீபத்தில் ஜோதிகாவுடன் நடித்த ‘ஷைத்தான்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
அதோடு, சித்தார்த் மற்றும் நயன்தாராவுடன் நடித்த ‘டெஸ்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் பெரும் வசூலை ஈட்டிய ‘துரந்தர்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘துரந்தர் 2’ படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக இருக்கும் மாதவனுக்கு பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!