• Jun 02 2026

40 வயசுல இத பண்ணுங்க..? மேக்கப் இல்லாத லுக்கில் இளசுகளுக்கு திரிஷா கொடுத்த அட்வைஸ்..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடிகை திரிஷா வலம் வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி வசூல் வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் “மே மாத நிகழ்வுகள்” என்ற தலைப்பில் பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

அத்துடன் புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா அதில், “மேஜிக்கல் மே மாதத்தில் நடந்த சில அழகான நினைவுகள்… இவை நீண்ட நாட்கள் என் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது அவருக்கு மே மாதம் மிக முக்கியமானதாக காணப்பட்டுள்ளது. ஏனெனில் மே மாதம் நான்காம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் அவர் தனது 43வது பிறந்தநாளையும் கொண்டாடினார்.


த்ரிஷா பகிர்ந்த புகைப்படத் தொகுப்பில் பல இனிய தருணங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் முதல் படமாக அவர் தனது செல்ல நாயுடன் அன்பான தருணத்தில் இருப்பது காணப்பட்டது. மற்றொரு படத்தில் அவர் பிரார்த்தனை குறிப்பேடு வைத்திருப்பதும் கவனம் பெற்றது.

மேலும், மலர் வடிவ உடையில் எடுத்த மிரர் செல்ஃபியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிடைத்ததாக கருதப்படும் பூக்கொத்துகளும் அந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.

அடுத்த படத்தில் த்ரிஷா மேக்கப் இல்லாத இயல்பான தோற்றத்தில் காணப்பட்டார். இறுதி படத்தில் மீண்டும் அவரது செல்ல நாய் இடம்பெற்றிருந்தது.

இந்த புகைப்படங்களுக்கு அவர் குறிப்பிட்ட சுவாரஸ்யமான கேப்ஷன்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதன்படி அவருடைய பதிவில்,

“40 வயதில் 25 போல தோன்ற வேண்டும் என்பது இலக்கு அல்ல. 20 வயது பெண்களுக்கு 40 வயது எதிர்பார்க்கத்தக்க அழகான காலம் என்பதை காட்ட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் பெரும் அளவில் கமெண்ட் செய்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement