விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதை முன்னிட்டு நேற்று விஜய் டிவியில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி வெளியான புதிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசும்போது, இந்த சுவாரசியமான போட்டிய ஒன்பது வருஷமா பார்த்துட்டு இருக்கீங்க… ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு கண்டெஸ்ட்டன்ஸ்… இப்போ சீசன் 9 முடிஞ்சிருக்கு. இப்போ சீசன் 10க்கான அதிகாரப்பூர்வ பிரமோ ரிலீஸ் பண்ணிருக்கோம்.
இந்த வருஷமும் நான் தான் ஹோஸ்ட்டா இருக்கேன் அப்படிங்கறதை இந்த ப்ரோமோலயே உறுதி பண்ணிருக்கோம். முன்னாடி கமல் ஹாசன் சார் ஏழு சீசன் நடத்தினாங்க. இப்போ எட்டு, ஒன்பது, பத்து சீசனையும் நான் தான் ஹோஸ்ட் பண்ணுறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 குறித்து பேசும் போது, விஜய் டிவி இந்த முறை “காமன் மேன் (Common man) ” என்ற புதிய கான்செப்ட்டை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி எந்த பிரபலமும் இல்லாத சாதாரண மக்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 2 நிமிட வீடியோ அனுப்பி ஆடிஷன் செய்ய வேண்டும் என்றும், அதிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் நேரடி ஆடிஷனுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம் ஷோ வடிவில் நடைபெறும் இந்த தேர்வில் வெற்றி பெறும் ஒருவரே பிக் பாஸ் சீசன் 10 வீட்டுக்குள் காமன் மேன் ஆக நுழைய வாய்ப்பு பெறுவார் என கூறப்படுகிறது. இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!