• Jul 29 2026

இப்படியா டிரெஸ் பண்றது? லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரீலீலா...

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ஸ்ரீலீலா. தனது துள்ளலான நடிப்பு, அழகிய தோற்றம் மற்றும் உற்சாகமான நடனங்களின் மூலம் இளைஞர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது பல முன்னணி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


சமீபத்தில் ஜூன் 14ஆம் தேதி தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிய ஸ்ரீலீலா, அந்த சிறப்பு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவர் அணிந்திருந்த உடை மற்றும் அவரது எளிமையான, அதே நேரத்தில் நேர்த்தியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக புகைப்படங்களில் ஸ்ரீலீலாவின் புன்னகையும், அழகும் அவரை தேவதை போல் காட்சியளிக்கச் செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement