• Jun 14 2026

அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ஸ்பெஷல் போஸ்ட்..! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனால் அவரின் புதிய திரைப்பட அப்டேட் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘AA22xA6’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு 'ராக்கா ' என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை கலாநிதி மாறன்  தலைமையிலான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் 800 முதல் 900 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சற்றுமுன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அல்லு அர்ஜுன் மொட்டைத் தலையுடன், வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரது தோற்றம் ஃபான்டஸி அல்லது புராணக் கதையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராக்கா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளதுடன், அடுத்த ஆண்டு உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement