• Jan 19 2025

மாமனார்ட வேட்டையனோடு மருமகனின் இட்லி கடையும் புஸ்வானமா போயிட்டே..! shooting spot leaked

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் தனுஷ். இவர் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று இயக்குனர் ஆகவும் தயாரிப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் காணப்படுகின்றார்.

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி  நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ராயன் படத்தில் அதிரடியான வன்முறை காட்சிகள் இடம் பெற்ற போதும் அதில் அவருக்கும் அவருடைய தங்கைக்கும் இடையிலான பாச போராட்டம் பலரையும் கவர்ந்தது.

இதை தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை, குபேரா, இளையராஜாவின் பயோபிக் என வரிசையாகவே படங்களை கைவசம் வைத்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின்  ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது. தற்போது இந்த விடயம் படக்குழுவினருக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன்  திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தின் காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தற்போது சூப்பர் ஸ்டாரின் மருமகனான தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement