• Jan 19 2025

இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப பிடிச்சு இருக்கு.. லொஸ்லியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளராக காணப்பட்டவர் தான் லொஸ்லியா மரியநேசன். இவர் தற்போது திரைப்பட நாயகியாக வலம் வருகின்றார் இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவருடைய அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாகவே கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது. லொஸ்லியாவின் அப்பா காதலை எதிர்த்ததால் இருவரும் அதனை கைவிட்டார்கள். பிக் பாஸ்க்கு வெளியே வந்த பிறகு தமிழ் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆனார். அதன் பின்பு கவின் பற்றிய கதைக்கு இடமில்லாமல் போனது.


2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரரான  ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். அதன் பின்பு கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் சமூக வலைத்தள பக்கங்களில் போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது லாஸ்லியா மஞ்சள் நிற புடவையில் தலையில் சிவப்பு நிற ரோஜா பூ வைத்து அழகிய போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது இதனைப் பார்த்த ரசிகர்கள் லோசலியாவின் அழகை மெய் மறந்து பார்த்து கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement