நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் சமீபத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. நாக சைதன்யா இரு வீட்டார்களின் சம்மதத்துடனும் சோபிதாவை இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை ரொம்ப நாட்கள் நீடிக்க வில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இதைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா மீது காதல் கொண்டார். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அதன் பின்பு அனைவருடைய சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
d_i_a
இந்த நிலையில், எங்களுடைய நட்பு முதலில் இன்ஸ்டாகிராமில் தான் தொடங்கியது என்று தங்களுடைய காதல் கதை பற்றி மனம் திறந்து உள்ளார் நடிகை சோபிதா துலிபாலா. தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், எம்முடைய காதல் இன்ஸ்டாவில் தொடங்கியது. இதை தொடர்ந்து சில தினங்களில் நட்புடன் பேசி பழகினோம். என்னை சந்திப்பதற்காகவே நாக சைதன்யா ஹைதராபாத்தில் இருந்து ஒரு மணி நேரம் விமானத்தில் டிராவல் செய்து மும்பைக்கு வருவார்.
அடுத்த ஒரு வாரத்திலேயே நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் மீண்டும் சந்தித்தோம். அதன் பிறகே இருவரும் காதலில் விழுந்தோம் . 2022 ஆம் ஆண்டு என்னுடைய பிறந்தநாளை கொண்டாட நாக சைதன்யா லண்டனுக்கு வந்தார்.
இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் புதிய ஆண்டிற்கு முதல் நாள் இருவரும் இணைந்து நாக சைதன்யா குடும்பத்துக்கு முன் தங்களது காதலை தெரிவித்தோம். அவர்களும் எங்களுடைய காதலுக்கு பெர்மிஷன் கொடுத்தார்கள்.
அதேபோல சோபிதாவின் குடும்பத்தை நாக சைதன்யா சந்தித்து சம்மதம் வாங்கியுள்ளார். இவ்வாறு தங்களுடைய காதல் பயணத்தை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் சோபிதா.
Listen News!