பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இன்னும் ஒரு மாதத்தில் நிறைவுக்கு வரவுள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரையில் 73 நாட்களை கடந்த நிலையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
குறித்த ப்ரோமோவில் சீரியல் நடிகை பவித்ரா சக போட்டியாளர்களை கடித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
d_i_a
அதன்படி, பவித்ராவுக்கும் ஜாக்குலினுக்கும் இடம்பெற்ற போட்டியில் பவித்ரா கடிக்கிறா என மஞ்சரி கத்துகிறார். இதன்போது நீ பண்ணினது தப்பு என ஜாக்குலின் சொல்லுகிறார்.
இதை தொடர்ந்து மஞ்சரிக்கும் பவித்ராவுக்கு வாக்குவாதம் தொடர, நீ என்ன கடிமா என்று பவித்ரா கத்துகிறார். பிறகு தான் கடித்தை ஒத்துக் கொள்கிறார்.
இதனால் மஞ்சரி அவங்களே தப்புன்னு சொல்லிட்டாங்க.. அதனால யாரும் பேசாதீங்க என்று சொல்லுகிறார். ஆனாலும் பவித்ரா நீங்க சொல்லுறது தான் சரியா? நான் வேணும் என்றே பண்ணல என அழுது புலம்புகிறார். இது தான் சற்றுமுன் வெளியான ப்ரோமோ.
Listen News!