• Feb 23 2025

ஸ்மால் ஹவுஸ் பாத்ரூம்க்கு LOCK இல்ல... நானும் அனுபவிச்சன்! Pradeep பற்றிய உண்மைகளை உடைத்த விசித்ரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்குபற்றிய போட்டியாளரான விசித்திரா, தற்போது சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதன்படி, விசித்ரா நேற்றைய தினம் வழங்கிய பேட்டி ஒன்றில்.,பிரதீப்பின் விஷயம் பற்றி உண்மைகளை உடைத்துள்ளார். அதில் அவர் கூறியவை வருமாறு,

பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இருந்த நேரத்தில் அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


அதாவது, பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இரவில் தூங்காமல் முழித்துக் கொண்டிருக்கிறார், அதிலும் முக்கியமாக பாத்ரூம் செல்லும்போது கதவை லாக் பண்ணுவதில்லை, கதவைத் திறந்து வைத்துக் கொண்டு டாய்லெட் செல்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டே  அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பேட்டியளித்த விசித்ரா, ஸ்மோல் ஹவுஸில் பாத்ரூமுக்கு லாக் இல்லை என்ற உண்மையை உடைத்துள்ளார்.


மேலும் தான் ஸ்மால் வீட்டில் இருந்தபோது அங்கு பாத்ரூமுக்கு லாக் இல்லை என்பதை அவதானித்து பலமுறை சொல்லி உள்ளேன் அதற்கு லாக் போடும் படி. ஆனால் அவற்றை செய்யவில்லை.

நான் பாத்ரூம் செல்லும்போதும் வெளியில் வந்து அனைவரும் சொல்லிவிட்டே செல்வேன் குளிக்கப் போகிறேன் என்று. ஆனா அப்பவே பிரதீப் சொல்லுவான் இது வந்து பிளான் பண்ணி எடுத்து இருக்காங்க, அது அண்ட் கன்ஃபில்ட்டா இருக்கும். இதனால பிரச்சனை வரும் என்று சொல்லி இருந்தான்.

அதுபோலவே, இரவில் நானும் பிரதீப்பும் தான் நேரத்துக்கு தூங்குவோம், நேரத்துக்கு எழுந்து இருப்போம். அவங்க நைட்ல அவன் தூங்காம இருக்கான் என்று சொன்னது எல்லாம் பொய் எனவும் உண்மைகளை உடைத்துள்ளார்.

Advertisement

Advertisement