• Mar 31 2025

"Rowdy Baby" என்டவங்க இப்ப வேற மாறி பார்க்கிறாங்க.. – சாய்பல்லவி குறித்து கமலஹாசன்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "அமரன்" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும்  திரில்லர் போன்ற பின்னணியுடன் உருவாகி மக்கள் மனங்களை கவர்ந்திருந்தது.

சமீபத்தில் நடந்த அமரன் வெற்றி விழாவில் , நடிகர் கமலஹாசன் ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்து கொண்டார். கமல் அதன்போது , "அமரன் வெளியான போது, அனைவரும் தன்னை ‘Rowdy Baby’ என்று கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது என்னை வேறு மாதிரி பார்க்கிறார்கள், நல்லதாக சொல்லுகிறார்கள்!" என சாய்பல்லவி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.


இந்தக் கருத்து ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றது. இதற்கு கமலஹாசன் சாய்பல்லவியின் திறமையை பாராட்டும் வகையில் மிக அழகாக பதிலளித்ததாகவும் கூறினார். அதில் "நீங்கள் அந்த சரியாக  போகாத சினிமா படத்திலே ‘Rowdy Baby’ என தனியாக தெரிந்தீர்கள், அதுதான் உங்கள் திறமை!" என்றார்.

இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே மிகுந்த திருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. முன்பு வெளியான "மாரி 2" படத்தில் சாய் பல்லவி நடனமாடிய "Rowdy Baby" பாடல், இந்திய அளவில் மாபெரும் ஹிட்டானது. ஆனால், அந்த படத்திற்குப் பிறகு, சாய் பல்லவியின் திரைமுகம் மற்றும் அவரின் தேர்வுகள் என்பன மாறிவிட்டன.

சாய் பல்லவி இப்போது சிறப்பான கதாபாத்திரங்களில், பெண்களின் வலிமையை பிரதிபலிக்கும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் தற்பொழுது அவருக்கு அதிகளவான ரசிகப் பட்டாளங்கள் உருவாகி உள்ளனர்.





Advertisement

Advertisement