• Mar 12 2026

பொங்கலுக்கு இரண்டு சப்ரைஸ் தரும் சிவகார்த்திகேயன்... ஆவலுடன் எதிர் பார்க்கும் ரசிகர்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் . ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்துடன் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 


அதனால் வரப்போகிற பொங்கல் தினத்தில் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். ரசிகர்களும் அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 


Advertisement

Advertisement