• Feb 21 2025

புதிய படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை டுவிட்டர் தளத்தில் பதிவு செய்த சிவகார்த்திகேயன்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அமரன் படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு காமிட்டாகியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது 1965 எனும் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் இவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் நடிக்கவுள்ள படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டரினை தனது x தள பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில் "கிங்ஸ்டனின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ஜி.வி பிரகாஷ் மற்றும் முழு அணியும் ஒரு பெரிய வெற்றி. இந்த சாகச கற்பனையை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இப் படமானது யோகி பாபு எழுதி கமல் பிரகாஷ் இயக்கத்தில் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இப் படத்தில் ஜி.வி பிரகாஷ் குமாருடன் இணைந்து திவ்யபாரதி நடிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement