• Jan 08 2025

விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் பாலா தான்..! அடித்து சொல்லும் வலைப்பேச்சு பிஸ்மி..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், 'மத கஜ ராஜா' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் உடல் மெலிந்த நிலையில் மற்றும் கைகளில் நடுக்கத்துடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், விஷாலின் உடல் நிலை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.


சுந்தர் சி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்தது ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் படம் வெளியாகாமல் இருந்தது.இந்நிலையில் தற்போது விஷால் இவ்வாறு உடல் நடுக்கத்துடன் இருப்பதற்கு இயக்குநர் பாலா தான் காரணம் என வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


அதாவது 'அவன் இவன்' படத்தின் போது பாலா விஷாலின் பார்வையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான காரணமாக அவரது பார்வையை மாற்றி அமைப்பது தொடங்கியது.பாலா அதற்காக விஷாலின் பார்வையை சீர்படுத்தும் விதமாக அவரை இழுத்து தைக்க வைத்து பார்வை மாற்றத்திற்கான முயற்சியில் ஈடுபட்டார். 


இந்த படப்பிடிப்பின் முடிவில் விஷாலுக்கு பார்வையை சீர்படுத்தியும் 'அவன் இவன்' படத்தின் டப்பிங் செய்யும் போது அவரது பார்வை தானாகவே ஒன்றரை கண் மாறிவிட்டது. இதை பாலாவே தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் விஷாலுக்கு உடல் பிரச்னையை ஏற்படுத்தியது. அடிக்கடி விஷாலுக்கு ஒற்றை தலைவலி ஏற்பட்டு, பல சிகிச்சைகளும் எடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதன் பின்னணி விஷால் சில தீய பழக்க வழக்கங்களுக்காக பாதிக்கப்பட்டு அது அவரது கண் பிரச்னையை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement