• May 19 2024

விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? ’கோட்’ படத்தில் வெங்கட் பிரபு சம்பவம்..!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் உடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா, சினேகா, மோகன், ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

அண்மையில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் விசில் போடு பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் போஸ்டர் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.


இந்த நிலையில் தற்போது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் முன்னணி நடிகராக காணப்படும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

எனினும், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அவ்வாறு நடந்தால் விஜயுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாக காணப்படும்.

Advertisement

Advertisement